சுவிஸில் கோடை காலத்தில் 16.5 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் விற்பனை!

சுவிட்சர்லாந்தில் நிலவிய கடும் கோடை வெப்பம் காரணமாக, நாட்டின் ஐஸ் கிறீம் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டு (2026) அமோக விற்பனை பதிவாகியுள்ளது.
கடந்த கோடை காலத்தில் மாத்திரம் சுவிட்சர்லாந்தில் சுமார் 16.5 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் விற்பனையாகியுள்ளதாக சுவிஸ் ஐஸ் கிறீம் உற்பத்தியாளர்கள் சங்கமான ‘கிளேஸ்சுவிஸ்’ அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 17 சதவீத விற்பனை அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை மொத்தமாக 42 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.6% அதிகமாகும்.
ஐஸ் லொலிகள் (Ice lollies) விற்பனை கிட்டத்தட்ட 27%, ஐஸ் கிறீம் குவளைகள் 26% மற்றும் ஐஸ் கிறீம் கோன்கள் 17% இற்கும் அதிகமாகவும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 27 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் வீட்டுப் பாவனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது (மொத்த விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு).
இது 2025 ஐ விட 9% அதிகமாகும். குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 10 மில்லியன் லீற்றருக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.
உணவகங்கள் மற்றும் விருந்தோம்பல் துறையிலும் கோடை காலத்தில் 2.3 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.4% அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.