குற்றத்தை ஒப்புக்காண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு தண்டனை

குற்றத்தை ஒப்புக்காண்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
உதிரிப்பாகங்களைக் கொண்டு சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்தமை உள்ளிட்ட மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு, மொத்தமாக 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறியதாகக் கூறி முன்னாள் அமைச்சருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நீதவான் இந்தத் தண்டப்பணத்தை விதித்துள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.